/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அஷ்டபந்தன கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா அஷ்டபந்தன கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
அஷ்டபந்தன கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
அஷ்டபந்தன கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
அஷ்டபந்தன கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
ADDED : மார் 27, 2025 08:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில் உள்ள அறம் வளத்தீஸ்வரர் கோவிலில், 52 ஆண்டுகளுக்குப்பின் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி , அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 8:00 மணிக்கு, கணபதி ஹோமம், ஜலம் திரட்டுதல் ஊர்வலமும், 108 சங்காபிஷேகமும், காலை 11:00 மணிக்கு அன்னதானமும், மாலை 4:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு பால ஷேத்ராலயா வைத்வ சபை குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும். இரவு 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடந்தது.