/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாதில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல் வாலாஜாபாதில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
வாலாஜாபாதில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
வாலாஜாபாதில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
வாலாஜாபாதில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : மார் 27, 2025 08:16 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் இல்லாமல்லி தலைமையில் நேற்று நடந்தது. அதில், வாலாஜாபாதில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் பேசியதாவது,
கலைவானி - தி.மு.க.,: வாலாஜாபாத் பேரூராட்சி, 9வது வார்டு, தனலட்சுமி நகரில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும், வாலாஜாபாத்தில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல் அலுவலர் - மாலா: மின் மயானம் ஏற்படுத்த இடம் தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தி.மு.க., - கருணாகரன்: அம்ருத் திட்ட பணிகள் மந்தமாகவே உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை.
செயல் அலுவலர் - மாலா: அம்ருத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க பணி ஒப்பந்ததார்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
வெங்கடேசன் - தி.மு.க.,: பல்வேறு கடைகளில் இருந்து வெளயேறும் குப்பை, கழிவு அருகாமையிலான பாலாற்றில் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். வாலாஜாபாதில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளின் தரம் குறித்து, பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், பேரூராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின்தான் தீர்வு காணப்படும் என்ற நிலை உள்ளது.
செயல் அலுவலர் - மாலா:: நடைபெறுகின்ற பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏதாவது புகார் இருந்தால் தெரிவிக்கலாம்.
அரிக்குமார் - அ.தி.மு.க.,: பேருந்து நிலையம் அருகே செயல்படும் டூ - வீலர் ஸ்டாண்ட், இரண்டு ஆண்டுகளாக ஏலம் விடாமல் பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக நிர்வாகிக்கப்படுகிறது. இதனால், பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க டூ - வீலர் ஸ்டாண்ட் நடத்த ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல் அலுவலர் - மாலா: இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவசங்கரி - ம.தி.மு.க.,: வாலாஜாபாத் பேரூராட்சி 10வது வார்டில், தெரு மின்விளக்கு, மழைநீர் வடிகால்வாய் மற்றும் சாலை சீரமைப்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்ற வேண்டும். மேலும், தாசப்ப சுபேதர் தெருவில் சிறு மின்விசை பம்பு அமைத்து தர வேண்டும்.
செயல் அலுவலர் - மாலா: தெருக்களில் விரைந்து மின்விளக்குகள் பொருத்தப்படும். அதற்கான பல்புகள் தயாராக உள்ளது. கால்வாய் மற்றும் சாலைகள் சீரமைக்க நிதி வந்ததும் அப்பணிகள் செய்யப்படும்.
அசோக்குமார் - வி.சி., வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ரயில்வே பாலத்தின் மீது மின்விளக்கு வசதி ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்குமார் - தி.மு.க.,: வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மழைநீர் வடிகால்வாய் வசதி மற்றும் கோடைக்காலம் துவங்கி உள்ளதால், வார்டுகளில் கைபம்பு அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை தேவை.
தனசேகரன் - தி.மு.க.,: வாலாஜாபாத் பேரூராட்சி பகுதி முழுக்க கால்நடைகள் நடமாட்டத்தால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், தெரு நாய்கள் மற்றும் பன்றிகள் தொந்தரவும் அதிகரித்துள்ளது. அவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல் அலுவலர் - மாலா: கால்நடைகளை சாலையில் விடாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். நாய் பிடிப்பு வாகனம் வரவைக்கப்பட்டு நாய்கள் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் கவுன்சிலர்களின் பல்வேறு கோரிக்கை வினாக்களுக்கு செயல் அலுவலர் மாலா பதில் அளித்தார்.