/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஏரிக்கரை சாலையில் எருக்கஞ்செடிகள் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதிஏரிக்கரை சாலையில் எருக்கஞ்செடிகள் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
ஏரிக்கரை சாலையில் எருக்கஞ்செடிகள் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
ஏரிக்கரை சாலையில் எருக்கஞ்செடிகள் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
ஏரிக்கரை சாலையில் எருக்கஞ்செடிகள் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 02, 2024 12:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருக்காலிமேடில் இருந்து, சி.வி.ராஜகோபால் தெருவிற்கு செல்லும் வழியில், அல்லாபாத் ஏரிக்கரை உள்ளது.
இக்கரையையொட்டி ஆங்காங்கே எருக்கஞ்செடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, அதன் கிளைகள் சாலையை மறித்து நிற்கின்றன.
கனரக வாகனம் வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, எருக்கஞ்செடியின் கிளை ஒடிந்தால், அதில் இருந்து வெளியேறும் பால், வாகன ஓட்டிகளின் கண்களை பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் உள்ளது.
மேலும், இம்மரங்கள் எதிரே வரும் வாகனங்களை மறைத்து விடுகின்றன. இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் அல்லாபாத் ஏரிக்கரை ஓரங்களில் வளர்ந்துள்ள எருக்கஞ்செடிகளை வேருடன் அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


