/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து ஆனைப்பள்ளத்தில் விவசாயிகள் போராட்டம் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து ஆனைப்பள்ளத்தில் விவசாயிகள் போராட்டம்
நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து ஆனைப்பள்ளத்தில் விவசாயிகள் போராட்டம்
நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து ஆனைப்பள்ளத்தில் விவசாயிகள் போராட்டம்
நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து ஆனைப்பள்ளத்தில் விவசாயிகள் போராட்டம்
ADDED : செப் 26, 2025 04:03 AM

உத்திரமேரூர்:ஆனைப்பள்ளத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து, விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் அடுத்த ஆனைப்பள்ளம் பகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, ஆனைப்பள்ளம், கல்லமா நகர், உத்திரமேரூர், சோமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை, விற்பனைக்காக குவியலாக கொட்டி பாதுகாத்து வருகின்றனர்.
மழையில் நெல் சேதம் இந்நிலையில், இந்த நெல் கொள்முதல் நிலையம், 10 நாட்களாக செயல்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் விற்பனைக்காக குவியலாக கொட்டி வைத்துள்ள நெல், சில நாட்களாக பெய்த மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. அவ்வாறு மழையில் சேதமடைந்த நெல் முளைவிடவும் ஆரம்பித்துள்ளது.
இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யாத, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக அதிகாரிகளை கண்டித்து, ஆனைப்பள்ளம் நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல், வியாபாரிகளிடமிருந்து 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த அதிகாரிகளை கண்டித்து, கண்டன கோஷங்களும் எழுப்பினர்.
நடவடிக்கை மேலும், இரண்டு நாட்களில், நெல் கொள்முதல் பணியை துவக்காவிட்டால், காஞ்சிபுரம் - - உத்திரமேரூர் சாலையில் நெல்லை கொட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆனைப்பள்ளம் நெல் கொள்முதல் நிலையத்தில் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ள, நெல்லை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
'இன்னும், ஒரு வாரத்திற்குள் அனைத்து நெல்லும் கொள்முதல் செய்யப்படும்' என்றார்.