/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கீழம்பி வேகவதி ஆறு தடுப்புச்சுவரில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வலியுறுத்தல் கீழம்பி வேகவதி ஆறு தடுப்புச்சுவரில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வலியுறுத்தல்
கீழம்பி வேகவதி ஆறு தடுப்புச்சுவரில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வலியுறுத்தல்
கீழம்பி வேகவதி ஆறு தடுப்புச்சுவரில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வலியுறுத்தல்
கீழம்பி வேகவதி ஆறு தடுப்புச்சுவரில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 25, 2025 08:00 AM

கீழம்பி: காஞ்சிபுரம் கீழம்பியில் இருந்து, கீழ்கதிர்பூர் வழியாக, செவிலிமேடு பாலாறு பாலத்திற்கு செல்லும் புறவழிச்சாலை உள்ளது. வேலுார், பெங்களூரூ உள்ளிட்ட உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து உத்திரமேரூர், வந்தவாசி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள்செல்லாமல் புறவழிச் சாலை வழியாக சென்று வருகின்றன.
இச்சாலையில், கீழம்பி - கீழ்கதிர்பூர் இடையே வேகவதி ஆறு குறுக்கிடும்இடத்தில் உயர்மட்ட பாலம் உள்ளது.
இப்பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்கவில்லை. இதனால், இரவு நேரத்தில் பாலம் அமைந்துள்ள பகுதி இருள் சூழ்ந்துள்ளதால், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கீழம்பி -- கீழ்கதிர்பூர் இடையே உள்ள வேகவதியாற்று பாலத்தின் தடுப்புச்சுவரில் ஒளிபிரதிபலிப்பான் பொருத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்திஉள்ளனர்.