ADDED : மார் 18, 2025 08:30 PM
காஞ்சிபுரம்:காஞ்சி திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றம் சார்பில், மாதந்தோறும் ஒரு சிவன் கோவிலில் சோமவார சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 321வது சோமாவர வழிபாடு மன்ற நிறுவனர் கங்காதரன் தலைமையில், காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் சாலையில் உள்ள மருதம் பிச்சாண்டேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதில், சிவனடியார்கள், திருவண்ணாமலை கிரிவல குழுவினர் பங்கேற்றனர்.