/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இடிந்து விழும் நிலையில் நிழற்குடை பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி இடிந்து விழும் நிலையில் நிழற்குடை பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
இடிந்து விழும் நிலையில் நிழற்குடை பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
இடிந்து விழும் நிலையில் நிழற்குடை பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
இடிந்து விழும் நிலையில் நிழற்குடை பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : மார் 17, 2025 12:49 AM

செவிலிமேடு:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு, பல்லவன் நகர் பேருந்து நிறுத்தத்தில், பயணியரின் வசதிக்காக, எட்டு ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது.
பல்லவன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பயணியர் தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்து வரும் வரை நிழற்குடையணில் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிழற்குடையில் தரை பகுதியில் பதிக்கப்பட்டுள்ள ‛டைல்ஸ்' உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, நிழற்குடையின் பின்பக்கம் சுவரின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
இதனால், பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் சூழல் உள்ளதால், நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர். நாளைடைவில் பயணியர் நிழற்குடையின் சுவர் முற்றிலும் சரிந்து விழுந்தால், பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள பல்லவன் நகர் பேருந்து பயணியர் நிழற்குடையின் உறுதி தன்மையை மாநகாட்சி பொறியாளர்கள் ஆய்வு செய்து, அதற்கேற்ப சீரமைப்பு பணியை துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.