Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தாமல் ஏரி தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு

தாமல் ஏரி தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு

தாமல் ஏரி தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு

தாமல் ஏரி தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு

ADDED : அக் 14, 2025 12:47 AM


Google News
தாமல், தாமல் ஏரி நிரம்பியதால், நேற்று, பாசனத்திற்கு, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 381 ஏரிகள் நீர் வளத்துறை கட்டுப்பாட்டிலும்; 380 ஏரிகள் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் என மொத்தம், 761 ஏரிகள் உள்ளன.

இதில், தாமல் ஏரி முழு கொள்ளளவான 18 அடியை எட்டியது. 206 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி உள்ளது. அதிலிருந்து, 450 கன அடி தண்ணீர் கலங்கல் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இதை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க.,- -- எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

ஏரி நீர் பாசனத்திற்கு பிரதான மதகு திறக்க அறிவுரை வழங்கப்படுள்ளது. இதையடுத்து, பாசனத்திற்கு உபரி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us