Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான கம்பிகள் தரம் கேள்விக்குறி; மழையில் நனையும் அவலம்

தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான கம்பிகள் தரம் கேள்விக்குறி; மழையில் நனையும் அவலம்

தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான கம்பிகள் தரம் கேள்விக்குறி; மழையில் நனையும் அவலம்

தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான கம்பிகள் தரம் கேள்விக்குறி; மழையில் நனையும் அவலம்

ADDED : செப் 17, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் தொகுப்பு வீடுகளுக்காக வழங்கப்பட்ட கம்பிகளை பாதுகாப்பாக வைக்க கூரையுடன், 'ஷெட்' இருந்தும், திறந்தவெளியில் போடப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

கனவு இல்லம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டம், கனவு இல்லம் திட்டங்களின் கீழ் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அரசு சார்பில் கட்டித் தரப்படும் தொகுப்பு வீடுகளுக்கு, ஊரக வளர்ச்சி துறை மூலம் கம்பிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ஸ்ரீபெ ரும்புதுார் ஒன்றியத்தில் கட்டப்பட்டுவரும் தொகுப்பு வீடுகளுக்கு தேவையான கம்பி ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டு உள்ளன.

அப்படி வழங்கப்பட்ட கம்பிகள், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பு இல்லாமல் மண் தரையில் போடப்பட்டுள்ளன.

ஸ்ரீ பெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், கம்பிகளை பாதுகாப்பாக வைக்க, பல லட்சம் ரூபாய் செலவில் கூரையுடன் 'ஷெட்' அமைக்கப்பட்டுள்ளது.

உறுதித்தன்மை இருந்தும், அதை பயன்படுத்தாமல் அதிகாரிகளின் அலட்சியத்தால், திறந்தவெளியிலேயே கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், மழையில் நனைந்து கம்பிகள் துருப்பிடித்து வருகின்றன.

இந்த கம்பிகளை பயன்படுத்தி பயனாளிகள் வீடு கட்டினால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

எனவே, திறந்த வெளியில் பாதுகாப்பின்றி போடப்பட்டுள்ள கம்பிகளை, கிடங்கில் வைத்து பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us