/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாவட்ட நுாலக கட்டுமான பணி முடிவடைவது எப்போது? மாவட்ட நுாலக கட்டுமான பணி முடிவடைவது எப்போது?
மாவட்ட நுாலக கட்டுமான பணி முடிவடைவது எப்போது?
மாவட்ட நுாலக கட்டுமான பணி முடிவடைவது எப்போது?
மாவட்ட நுாலக கட்டுமான பணி முடிவடைவது எப்போது?
ADDED : செப் 17, 2025 01:13 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, 3.5 கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட நுாலக அலுவலகம் மற்றும் மைய நுாலகம் கட்டும் பணி, 40 சதவீதம் முடிந்துள்ளது. வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட நுாலக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரு மாவட்டத்திற்கும் மாவட்ட நுாலக அலுவலக அலுவலகம் செயல்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, தனியாக மாவட்ட நுாலக அலுவலகம் அமைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், மாவட்ட நுாலக அலுவலகம் மற்றும் மைய நுாலகம் காஞ்சிபுரத்தில் கட்டுவதற்கு, நுாலக துறை 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
ஆனால், இடம் தேர்வு செய்வதில் பல மாதங்கள் இழுபறி நீடித்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 30 சென்ட் நிலம், மாவட்ட நிர்வாகம் வழங்கியது. இரு மாதங்கள் முன், கலெக்டர் அலுவலகம் அருகே நுாலக அலுவலகம் கட்டும் பணியை பொதுப்பணித் துறை துவக்கியது.
தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என, 3.5 கோடி ரூபாய் மதிப்பில், 12,000 சதுரடியில் கட்டடம் கட்டப்படுகிறது. இதுவரை 40 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாக பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட நுாலக அலுவலர், மைய நுாலகம், ஆவண அறை, குழந்தைகளுக்கான பிரிவு என, பல்வேறு பிரிவுகள் இந்த மைய நுாலகத்தில் இடம் பெற உள்ளன. டிசம்பர் மாதம் பணிகள் முடியும் என, பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.