/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ குளத்தில் பச்சிளம் குழந்தை உடல் நரபலியா என விசாரணை குளத்தில் பச்சிளம் குழந்தை உடல் நரபலியா என விசாரணை
குளத்தில் பச்சிளம் குழந்தை உடல் நரபலியா என விசாரணை
குளத்தில் பச்சிளம் குழந்தை உடல் நரபலியா என விசாரணை
குளத்தில் பச்சிளம் குழந்தை உடல் நரபலியா என விசாரணை
ADDED : செப் 13, 2025 02:21 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் தலையில்லாமல் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. நரபலி கொடுக்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது.
ராஜாக்கமங்கலம் பூவன் குடியிருப்பு அருகே சம்பக்குளம் உள்ளது. நேற்று மதியம் இந்த குளத்தில் தலை இல்லாத நிலையில் குழந்தை உடல் மிதந்துள்ளது. போலீசார் உடலை மீட்டனர்.
ஆனால் அக்குழந்தை ஆணா ,பெண்ணா என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீன்கள் கடித்ததால் உடல் உருக்குலைந்திருந்தது.
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை உடல் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பகுதியை மருத்துவமனைகளில் குழந்தை பெற்றவர்கள் யார், அவற்றின் நிலை என்ன என்பது பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை கொன்று குளத்தில் வீசினார்களா அல்லது யாராவது நரபலி கொடுத்திருக்கலாமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.