/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ மனைவியை கொன்றவர் கைது; மதிக்காததால் கொன்றதாக வாக்குமூலம் மனைவியை கொன்றவர் கைது; மதிக்காததால் கொன்றதாக வாக்குமூலம்
மனைவியை கொன்றவர் கைது; மதிக்காததால் கொன்றதாக வாக்குமூலம்
மனைவியை கொன்றவர் கைது; மதிக்காததால் கொன்றதாக வாக்குமூலம்
மனைவியை கொன்றவர் கைது; மதிக்காததால் கொன்றதாக வாக்குமூலம்
ADDED : செப் 16, 2025 12:38 AM
நாகர்கோவில்; ''ஒழுங்காக சாப்பாடு தருவதில்லை. மதிப்பதில்லை என்பதால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்,'' என, நாகர்கோவிலில் கைதான கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு இளையன்விளையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் குமார் 55. இவரது மனைவி கஸ்தூரி 50. மகன் வினித் 25, வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
மற்றொரு மகன் ஆட்லின் 24, கேரளாவில் தனியார் டிரைவராக உள்ளார். மகள் விபிஷா 21, பி.எட்., முடித்துள்ளார்.
ஜஸ்டின் குமார் அடிக்கடி போதையில் மனைவியிடம் தகராறு செய்வார். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் மேல் மாடியில் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
கீழே இருந்த மகள் விபிஷா வழக்கம் போல் சண்டை போடுகிறார்கள் என்று நினைத்து கண்டு கொள்ளவில்லை.
பிறகு நீண்ட நேரம் எந்த சத்தமும் இல்லாததால் விபிஷா மாடிக்கு சென்ற போது கஸ்தூரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். ஜஸ்டின் குமார் அலைபேசியை ஆய்வு செய்த போது அவர் நாகர்கோவிலில் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் வந்த போலீசார் ஜஸ்டின் குமாரை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது: நான் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்தேன். அப்போது சம்பாதித்த பணத்தில் சொத்துகள் வாங்கினேன்.
கஸ்துாரி எனக்கு தெரியாமல் சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது சரியான பதில் இல்லை. என்னை மதிப்பதும் இல்லை. ஒழுங்காக சாப்பாடு தருவதில்லை. வேலைக்கு செல்கிறேன் எனகூறி எங்காவது சென்று விடுவார்.
மகளுக்கு நானே மாப்பிள்ளை பார்த்துக்கொள்வேன் என அலட்சியமாக பேசினார். நேற்று மீண்டும் பிரச்னை ஏற்பட்டபோது அவரை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என கூறியுள்ளார். ஜஸ்டின்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.