/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 13, 2025 01:32 AM
கரூர், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, பழுதடைந்துள்ள நிழற்கூடங்களை, சீரமைக்க வேண்டும்.
கரூருக்கு பல்வேறு இடங்களில் இருந்து, நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். சேலம் செல்லும் சாலையில் உள்ள புகழூர், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், அய்யம்பாளையம் பகுதிகளில் இருந்து நிறைய தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் கரூர் வருகின்றனர். எனவே, கரூர்-சேலம் நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில்
பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற்கூடங்களின் மேற்கூரைகள் உடைந்துள்ளன. பயணிகள் உட்கார அமைக்கப்பட்ட இருக்கைகள் கழன்றும், காணாமலும் போய் விட்டன.
இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் துவங்கவுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி கரூர்--சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில், பழுதடைந்துள்ள நிழற்கூடங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.