/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 2 நாள் பெய்த மழையால் நெல் நாற்றங்கால் சேதம் 2 நாள் பெய்த மழையால் நெல் நாற்றங்கால் சேதம்
2 நாள் பெய்த மழையால் நெல் நாற்றங்கால் சேதம்
2 நாள் பெய்த மழையால் நெல் நாற்றங்கால் சேதம்
2 நாள் பெய்த மழையால் நெல் நாற்றங்கால் சேதம்
ADDED : செப் 13, 2025 01:31 AM
குளித்தலை, குளித்தலை பகுதியில், தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த மழையால், நெல் நாற்றங்கால் சேதம் ஏற்பட்டுள்ளது.
குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார், கூடலுார், தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம் பகுதிகளில் நெல் விவசாயத்திற்காக நாற்றங்கால் போடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக, இரவில் பெய்த மழையால் இந்த பகுதி களில் போடப்பட்ட நாற்றங்காலில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதை பாத்திரங்கள் மூலம் விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர்.
இரண்டு நாட்கள் பெய்த மழையால், கொடிங்கால் வடிகால் வாய்க்கால், சிவாயம் காட்டு வாரியில் மழை தண்ணீர் அதிகளவு வெளியேறியது. தொடர்ந்து இரவில் மீண்டும் மழை பெய்தால், நாற்றங்கால் முழுவதும் சேதம் ஏற்பட்டு விடும் என்ற துயரத்தில், விவசாயிகள் புலம்பியபடி உள்ளனர்.