ADDED : ஜூன் 29, 2024 02:26 AM
கரூர்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் மதுபான வகைகளால் ஏற்படும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ளது போல, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.