/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : ஜூன் 29, 2024 02:26 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம், டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமையில் நடந்தது. இதில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடந்த பிறப்பு, இறப்பு குறித்த பதிவுகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து தெரு விளக்கு பராமரிப்பு, புதிய குடிநீர் இணைப்பு கேட்கும் நபர்களுக்கு வைப்பு தொகை பெறப்பட்டு அதன்மூலம் இணைப்பு வழங்குதல், கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பகுதியில் புதிய சோலார் மின் விளக்கு அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்புதல் உள்பட பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
டவுன் பஞ்., துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் யுவராணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.