Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆடி மாத கொண்டாட்டம் வெல்லம் விலை அதிகரிப்பு

ஆடி மாத கொண்டாட்டம் வெல்லம் விலை அதிகரிப்பு

ஆடி மாத கொண்டாட்டம் வெல்லம் விலை அதிகரிப்பு

ஆடி மாத கொண்டாட்டம் வெல்லம் விலை அதிகரிப்பு

ADDED : ஜூலை 28, 2024 03:27 AM


Google News
கரூர்: ஆடி மாதம் தொடங்கியதால், கோவில் திருவிழாக்கள் நடப்-பதால், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் விலை அதிகரித்-துள்ளது.

கரூர் மாவட்டத்தில், நொய்யல், சேமங்கி, குளத்துப்பாளையம், கோம்புபாளையம், திரு காடுதுறை, தவிட்டுபாளையம், தள-வாப்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளில், அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக் கப்படுகிறது. கடந்த வாரத்தில், 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,250 ரூபாய் முதல், 1,350 ரூபாய் வரையிலும், அச்சு வெல்லம், 1,300 ரூபாய் முதல், 1,330 ரூபாய் வரையிலும் விலை போனது.

நேற்று முன்தினம் உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,450 ரூபாய்க்கும், அச்சு வெல்லம், 1,400 ரூபாய்க்கும் விற்பனையா-னது. விலை அதிகரிப் பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்-துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

கரூர் வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வர். ஆடி மாதம் தொடங்-கிய நிலையில், கோவில் விழாக்கள் நடப்பதால், பொங்கல் வைப்பதற்காக அதிகளவில் வெல்லம் விற்பனையாகும். வெல்-லத்துக்கு தேவை அதிகரித்துள்ளதால், விலை சற்று அதிகரித்துள்-ளது.

இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us