/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர் ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர்
ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர்
ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர்
ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர்
ADDED : ஜூலை 28, 2024 03:24 AM
கரூர்: ஆப்ரிக்கா நாட்டில் உள்ள, பர்கினோ பேசோவில் இருந்து ஜவுளி தொழில் நிறுவனம் சார்ந்த, 14 தொழில் முனைவோர் கரூ-ருக்கு வந்தனர். அவர்கள், கரூரில் உள்ள பல ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆப்ரிக்கா நாட்டு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் எதிர்பார்ப்பு ஆகி-யன பற்றி எடுத்து கூறினர். அவர்கள், ஆப்ரிக்க நாட்டுக்கு வந்து முதலீடு செய்ய வலியுறுத்தினர்.
கூட்டத்தில், சங்க முன்னாள் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, செயலாளர் சாரதி சுகுமார், பொருளாளர் அசோக் ராம்குமார், இணை செயலாளர் சேதுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
மகள் மாயம்; தந்தை புகார்