Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாயனுார் கதவணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

கரூர் மாயனுார் கதவணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

கரூர் மாயனுார் கதவணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

கரூர் மாயனுார் கதவணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

ADDED : ஜூலை 28, 2024 03:26 AM


Google News
கரூர்: கரூர் மாயனுார் கதவணையில், முதன்மை தலைமை பொறி-யாளர் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை சார்பில், 406.50 கோடி ரூபாய் மதிப்பில், கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கத-வணை பணி நடக்கிறது. மாயனுாரில், காவிரி-வைகை--குண்-டாறு நதிகள் இணைப்பு திட்ட பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

இந்த திட்ட பணிகளை, நீர்வள ஆதாரத்துறை சென்னை முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் தலைமையில் குழு-வினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், புகளூரில் கதவணை, 79 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகளை ஆய்வு செய்தனர். பின், மாயனுாரில் நடக்கும் காவிரி-வைகை--குண்டாறு நதிகள் இணைப்பு திட்ட பணியில் கால்வாய் வெட்டும் பணியை பார்வையிட்டார்.

மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கதவணையில், பாச-னத்திற்காக டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் ஷட்டர்கள் மூலம் திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரு-வதால், கதவணையில் உள்ள நீர் நிலவரங்கள் மற்றும் கடை-மடை பகுதி வரை செல்லும் காவிரி நீர் அளவீடுகள் குறித்து, நேரில் கள ஆய்வு பணிகளில் ஈடுபட அதிகாரிகளுக்கு அரசு அறி-வுறுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us