/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஜூலை 28, 2024 03:26 AM
குளித்தலை: குளித்தலை, காட்டுநாயக்கன் தெருவில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன், காளியம்மன், மதுரை வீரன், மகா கண-பதி கோவில் முதலாம் ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த, 19ல் மாலை அணிந்து காப்பு கட்டுதல், அன்று இரவு பூச்-சொரிதல் விழா நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு, கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து கரகம் அழைத்து வந்தனர். அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 11:00 மணிய-ளவில் கடம்பனேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து பக்-தர்கள் தீர்த்தக்குடம், குழந்தைகளை தொட்டியில் போட்டு ஊர்வ-லமாக குளித்தலையில் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர்.
தொடர்ந்து, தீர்த்தக்குடத்தின் தீர்த்தத்தை சுவாமிக்கு ஊற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தனர். பொது மக்களுக்கு விழாக்-குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை மாவிளக்கு பூஜை, கரகம் வீதி உலா நடைபெற்றது. இன்று மதுரைவீரன் சுவாமிக்கு கிடா வெட்டுதல், மதியம் சுவா-மிக்கு படையலிட்டு, பிரசாதம் வழங்குதல், தொடர்ந்து பக்தர்க-ளுக்கு வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு மஞ்சள் நீராட்டு விழாவுடன், கரகம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடை-பெறுகிறது.