/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது;லாரி பறிமுதல் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது;லாரி பறிமுதல்
மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது;லாரி பறிமுதல்
மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது;லாரி பறிமுதல்
மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது;லாரி பறிமுதல்
ADDED : ஜூன் 18, 2025 02:28 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, நங்கவரம் எஸ்.ஐ.. பிரபாகரன் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை பெரியபனையூர் கொல்லன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த மகேந்திரா டிராக்டர் டிப்பர் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் ஒரு யூனிட் காற்றாற்று வாரி மணல் இருந்தது. விசாரணையில் உரிய அனுமதியில்லாமல் மணல் கடத்தியது தெரியவந்தது.
மணல் கடத்தலில் ஈடுபட்ட பரமசிவம், 42, குஞ்சடைக்கன், 49, ஆகிய இருவரை நங்கவரம் போலீசார் கைது செய்தனர். பின், டிப்பர் டிராக்டரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பரமசிவம் மீது நான்கு வழக்கு, குஞ்சடைக்கன் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.