/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் அருகே இளம் பெண் குழந்தைகளுடன் மாயம் கரூர் அருகே இளம் பெண் குழந்தைகளுடன் மாயம்
கரூர் அருகே இளம் பெண் குழந்தைகளுடன் மாயம்
கரூர் அருகே இளம் பெண் குழந்தைகளுடன் மாயம்
கரூர் அருகே இளம் பெண் குழந்தைகளுடன் மாயம்
ADDED : ஜூன் 18, 2025 02:29 AM
கரூர், கரூர் அருகே, வீட்டில் இருந்து மூன்று குழந்தைகளுடன் வெளியே சென்ற, இளம் பெண்ணை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அருகம்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் அனிஷ் பாத்திமா, 24; இவர் ஆனந்த் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாணிசிகா, 10; தன்ஷிகா, 5; கனிஷ்கா, 3; ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவர் ஆனந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அனிஷ் பாத்திமா கடந்த, ஒரு மாதமாக தாய் ஹாரனிஷா, 45, வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த, 8ல் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற, அனிஷ் பாத்திமா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, தாய் ஹாரனிஷா கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் வழக்குப்
பதிவு செய்து தேடி வருகின்றனர்.