/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் இலவச சட்ட உதவிக்கு ஏற்பாடு கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் இலவச சட்ட உதவிக்கு ஏற்பாடு
கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் இலவச சட்ட உதவிக்கு ஏற்பாடு
கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் இலவச சட்ட உதவிக்கு ஏற்பாடு
கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் இலவச சட்ட உதவிக்கு ஏற்பாடு
ADDED : செப் 24, 2025 02:12 AM
கரூர் :கரூர் எஸ்.பி., அலுவலக குறைதீர் முகாமில், இலவச சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்
குறிப்பு: கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வாரந்தோறும், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்து வருகிறது.
அதில், பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில், மாவட்ட இலவச சட்ட உதவி மையம் சார்பில், எஸ்.பி., ஜோஸ் தங்கையா பரிந்துரைப்படி, வக்கீல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடக்கவுள்ள குறைதீர் முகாமில் பொதுமக்கள், வக்கீல் மூலம் இலவச சட்ட உதவியை பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.