ADDED : செப் 24, 2025 02:11 AM
கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களில், புதிதாக பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. குளித்தலை தொகுதி தி.மு.க., -
எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார்.
இதில், முத்தம்பட்டி கிராமம், அய்யம்பாளையம், குடித்தெரு, அக்காரக்கம்பட்டி, போத்துராவுத்தன்பட்டி பஞ்., குள்ளம்பட்டி, பஞ்சப்பட்டி பஞ்., காரைக்குடி, சுக்காம்பட்டி, கொமட்டேரி கிராமம், வெள்ளையகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள், எளிதாக ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன், குளித்தலை, வட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பஞ்சப்பட்டி கூட்டுறவுத்துறை சங்க அதிகாரி
கள், ரேஷன் கடை பணியாளர்கள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்