/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இலவச தையல் பயிற்சி நிறைவு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல் இலவச தையல் பயிற்சி நிறைவு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
இலவச தையல் பயிற்சி நிறைவு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
இலவச தையல் பயிற்சி நிறைவு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
இலவச தையல் பயிற்சி நிறைவு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜூலை 03, 2025 01:29 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலையில் சினேகிதி டிரஸ்ட் மற்றும் சி.ஹெச்.எம் நிறுவனம் ஆகியவை சார்பில், இலவச தையல் பயிற்சி நிறைவு, சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், பட்டியல் பிரிவினர், துாய்மை பணியாளர்கள் குடும்பத்தை சேர்ந்த, 50 பெண்களுக்கு சினேகிதி டிரஸ்ட் சார்பில், ஆறு மாத தையல் பயிற்சி, சுழல் நிதி கடன் திட்டம், தொழில் வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்ட இயக்குனர் சத்யா தலைமை வகித்தார். மாநில முதன்மை பயிற்றுனர் மகாலட்சுமி திட்ட விளக்க உரையாற்றினார். தோகைமலை யூனியன் கமிஷனர் ராஜேந்திரன், பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ், 'டூல்ஸ் கிட்' ஆகியவற்றை வழங்கினார்.
தோகைமலை விவசாயிகள் மறுவாழ்வு அறக்கட்டளை இயக்குனர் நாகராஜ், பாதிரிப்பட்டி இயற்கை அறக்கட்டளை இயக்குனர் சோபிகா ஆகியோர் கருத்துரை ஆற்றினர். முன்னதாக பயிற்சி நிறைவு செய்த, 50 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வாங்க, சுழல் நிதி கடன் தலா, 12 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தன்னார்வலர் சுவாமிநாதன் செய்திருந்தார்.
முன்னதாக தையல் பயிற்சி ஆசிரியை உலகேஸ்வரி வரவேற்றார். சினேகிதி டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் தீபா நன்றி கூறினார்.