Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேர் நிற்கும் இடத்தில் கான்கிரீட்; நகராட்சி தடுத்து நிறுத்தம்

தேர் நிற்கும் இடத்தில் கான்கிரீட்; நகராட்சி தடுத்து நிறுத்தம்

தேர் நிற்கும் இடத்தில் கான்கிரீட்; நகராட்சி தடுத்து நிறுத்தம்

தேர் நிற்கும் இடத்தில் கான்கிரீட்; நகராட்சி தடுத்து நிறுத்தம்

ADDED : ஜூலை 27, 2024 12:56 AM


Google News
குளித்தலை: குளித்தலை, டவுன் ஹால் தெருவில் நீலமேக பெருமாள் கோவில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்-பாட்டில் உள்ளது. கோவிலின் தேர் எதிரில் உள்ள சாலை அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இத்திருந்தேர் திறந்த வெளியில் இருந்ததால் மழை, வெயில் பட்டு சேதம் ஏற்பட்டது. பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் உதவியுடன் திருத்தேர் அமைக்-கப்பட்டது. இதன் பாதுகாப்பு கருதி தேருக்கு தகரத்தால் ஆன கொட்டகை போடப்பட்டது. தேர் பாதுகாப்பு கருதி நேற்று முன்-தினம் மதியம் சிமென்ட் கான்கிரீட் தளம்அமைக்கும் பணியில் கோவில் செயல் அலுவலர் சித்ரா மற்றும் உபயதாரர்கள் மேற்பார்-வையில் அமைக்கப்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் தளம் அமைக்கும் பணியை நிறுத்த-வேண்டும் என்றனர்.பல ஆண்டுகளாக கோவில் தேர் இதே இடத்தில் உள்ளது. இந்த இடம் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. நகராட்சி அனுமதியில்-லாமல் தளம் அமைக்கக் கூடாது என கூறி, சிமென்ட் கலவை இயந்திரத்தினை நகராட்சி பணியாளர்கள், துாய்மை பணியா-ளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் உபயதாரர்கள், கோவில் செயல் அலுவலர், ஹிந்து அமைப்பினர்கள் வாக்கு-வாதம் செய்தனர். தகவல் அறிந்த வந்த தாசில்தார் சுரேஷ், எஸ்.ஐ.,பிரபாகரன் ஆகியோர், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்-தையில் முடிவு காண வேண்டும் என கூறியதன் பேரில், கோவில் நிர்வாகம் சார்பில் தளம் அமைக்க கோரிக்கை மனுவை நக-ராட்சி கமிஷனரிடம் கொடுத்தனர். இதுகுறித்து மேல் அதிகாரியிடம் தெரிவித்து உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும், அதுவரை பணிகள் செய்யக்கூடாது என தெரிவித்தார். நடைபெற்ற தளம் அமைக்கும் பணி நிறுத்தம் செய்-யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us