/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை மின்வாரியத்தின் குறுஞ்செய்தியால் குழப்பம் குளித்தலை மின்வாரியத்தின் குறுஞ்செய்தியால் குழப்பம்
குளித்தலை மின்வாரியத்தின் குறுஞ்செய்தியால் குழப்பம்
குளித்தலை மின்வாரியத்தின் குறுஞ்செய்தியால் குழப்பம்
குளித்தலை மின்வாரியத்தின் குறுஞ்செய்தியால் குழப்பம்
ADDED : செப் 24, 2025 01:34 AM
குளித்தலை :குளித்தலை மின்வாரியம் சார்பில், நேற்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின் பாதை பராமரிப்பு காரணமாக, மின் நிறுத்தம் செய்யப்படும் என, கோட்ட பொறியாளர் சரவணன் அனைத்து செய்தித்தாள்களுக்கும் அறிக்கை வழங்கினார். இதுகுறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மின் நுகர்வோர்களின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
அதில், காலை, 10:00 மணி முதல், 14:00 மணி (மதியம், 2:00 மணி) வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இருந்தால் மட்டுமே தொழில் மேற்கொள்ளும் தொழிலாளர்கள், மதியத்திற்கு மேல் பணி செய்வதற்காக காத்திருந்தனர். ஆனால், மாலை, 5:00 மணிக்கே மின்சாரம் வந்தது. இதனால் மின்சாரத்திற்காக காத்திருந்த தொழிலாளர்கள் பணி செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.