/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காந்தி கிராமம் உள்பகுதியில் ஷேர் ஆட்டோ இயக்க கோரிக்கை காந்தி கிராமம் உள்பகுதியில் ஷேர் ஆட்டோ இயக்க கோரிக்கை
காந்தி கிராமம் உள்பகுதியில் ஷேர் ஆட்டோ இயக்க கோரிக்கை
காந்தி கிராமம் உள்பகுதியில் ஷேர் ஆட்டோ இயக்க கோரிக்கை
காந்தி கிராமம் உள்பகுதியில் ஷேர் ஆட்டோ இயக்க கோரிக்கை
ADDED : செப் 24, 2025 01:34 AM
கரூர், கரூரில், 35-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது அவசர தேவைக்கு ஷேர் ஆட்டோவைத்தான் முழுமையாக நம்பியுள்ளனர். கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தான்தோன்றிமலை, காந்தி கிராமம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். குறைந்த துார பயணத்திற்கு ஷேர் ஆட்டோ பயணம் ஏற்றதாக பொதுமக்கள் நினைக்கின்றனர்.
கரூர், காந்திகிராமம் டபுள் டேங்கில் இருந்து ஷேர் ஆட்டோ இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், தெற்கு, வடக்கு காந்திகிராமம் உள்ளே இருக்கும் முக்கிய பகுதிகளில் ஷேர் ஆட்டோ செல்வது கிடையாது. காந்திகிராமம் டபுள் டேங்கில் இருந்து ஏராளமான மினி பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், மக்கள் ஏறி சென்று விடுவதால் சில நேரங்களில் ஷேர் ஆட்டோ கூட்டம் குறைவாக இருக்கும்.
எனவே, காந்தி கிராமத்தில் உள்பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோ சென்று வர வேண்டும். மேலும், கரூர், காந்திகிராமம் அரசு மருத்துவ கல்லுாரி செல்ல பஸ் வசதி குறைவாக உள்ளது. அங்கு ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.