மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி
மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி
மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி
ADDED : ஜூன் 17, 2025 02:24 AM
கரூர், க.பரமத்தி அருகே, மொபட் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பள்ளமருதப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 68; இவர், நேற்று முன்தினம் க.பரமத்தி அருகே, கோவை சாலை பவித்திரம் பகுதியில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருப்பூர் மாவட்டம், பூலுவாப்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார், 25, என்பவர் ஓட்டி சென்ற வேன், மொபட் மீது மோதியது. அதில், கீழே விழுந்த பழனிசாமி, தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து, பழனிசாமியின் மகள் கோகிலா, 36, போலீசில் புகார் செய்தார்.
க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.