/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பஸ் ஸ்டாப்பில் சாய்ந்த மரம் சிக்கிய இரு சக்கர வாகனங்கள் பஸ் ஸ்டாப்பில் சாய்ந்த மரம் சிக்கிய இரு சக்கர வாகனங்கள்
பஸ் ஸ்டாப்பில் சாய்ந்த மரம் சிக்கிய இரு சக்கர வாகனங்கள்
பஸ் ஸ்டாப்பில் சாய்ந்த மரம் சிக்கிய இரு சக்கர வாகனங்கள்
பஸ் ஸ்டாப்பில் சாய்ந்த மரம் சிக்கிய இரு சக்கர வாகனங்கள்
ADDED : ஜூன் 17, 2025 02:24 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில், வேப்பமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணராயபுரத்தில் வேப்பமரம் பஸ் ஸ்டாப் பகுதி உள்ளது. நேற்று காலை, 11:00 மணிக்கு பலத்த காற்று வீசியதால், இங்குள்ள வேப்பமரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன.
அப்போது மரத்தின் கீழ் பகுதியில், கடைவீதிக்கு வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளுக்கு சென்று விட்டனர். மரம் வாகனங்களின் மீது மட்டும் விழுந்தது.
மேலும் வாகனங்களை எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர் ஒரு வழியாக மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு, வாகனங்கள் மீட்கப்பட்டன. கிருஷ்ணராயபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.