/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மின் கணக்கீடு செய்யவில்லை மின் வாரியம் அறிவிப்பு மின் கணக்கீடு செய்யவில்லை மின் வாரியம் அறிவிப்பு
மின் கணக்கீடு செய்யவில்லை மின் வாரியம் அறிவிப்பு
மின் கணக்கீடு செய்யவில்லை மின் வாரியம் அறிவிப்பு
மின் கணக்கீடு செய்யவில்லை மின் வாரியம் அறிவிப்பு
ADDED : செப் 13, 2025 01:34 AM
குளித்தலை, குளித்தலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாயனுார் துணை மின் நிலையத்தில், மின் கணக்கீட்டாளர் இல்லாததால், நடப்பு மாதத்திற்கு மின் கணக்கீடு செய்யவில்லை.
எனவே, நுகர்வோர்கள் கடந்த ஜூலை மாதத்தில் பயன்படுத்திய யூனிட் கணக்கில் பதிவு செய்யப்படும். இதில் பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, எம்.புதுப்பட்டி, குப்புரெட்டியப்பட்டி. அழகாபுரி, மலைப்பட்டி, தாரபுரத்தனுார், தொட்டியப்பட்டி, உடையகுளத்துப்பட்டி ஆகிய கிராமங்கள் அடங்கும். எனவே, அதற்குரிய மின்கட்டணத்தை செலுத்திடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.