/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம் மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : செப் 13, 2025 01:34 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் நடந்த, சாதாரண கூட்டத்திற்கு டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகராஜன், இ.ஒ., காந்தரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டவுன் பஞ்., அலுவலக இளநிலை உதவியாளர் விமல் தீர்மானங்களை வாசித்தார். இதில், பழைய டவுன் பஞ்., அலுவலகத்தை அகற்றி, புதியதாக டவுன் பஞ்., கட்டடம் கட்டுதல், 15 வது நிதி ஆணைய நிபந்தனை மானியம், இரண்டாவது தவணையில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிக்கம்பட்டி, ஆதிநத்தம், கருங்கல்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள மயானத்தில் ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிப்பம்பு அமைத்தல், கருங்கல்பட்டியில், ஆழ்துளை கிணறுடன் கூடிய மினிபவர் பம்பு, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்தல் உள்பட, 13 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் கவுன்சிலர்கள், சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.