/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மின் தடையால் இயங்காத சிக்னல் விளக்கு கரூரில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு மின் தடையால் இயங்காத சிக்னல் விளக்கு கரூரில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
மின் தடையால் இயங்காத சிக்னல் விளக்கு கரூரில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
மின் தடையால் இயங்காத சிக்னல் விளக்கு கரூரில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
மின் தடையால் இயங்காத சிக்னல் விளக்கு கரூரில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : செப் 13, 2025 01:30 AM
கரூர், கரூர் நகரில் மின் தடையால், நேற்று தானியங்கி சிக்னல்கள் செயல்பட வில்லை. இதனால், கரூர் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலை, திருச்சி சாலை, ஜவஹர் பஜார் சாலை மற்றும் தின்னப்பா கார்னர் சாலைகள் பிரியும் இடத்தில், மனோகரா கார்னரில் நான்கு பகுதி களிலும், தானியங்கி சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. தானியங்கி சிக்னல்கள் செயல்பட மின் இணைப்பு களும் உள்ளது. இந்நிலையில், நேற்று கரூர் நகரில் மின் வாரியம் சார்பில், பராமரிப்பு நடந்தது. இதனால் காலை, 9:00 முதல் மாலை, 5:00 வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.
அப்போது, வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்றதால் மனோகரா கார்னர், திருகாம்புலியூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும், கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்களும், திருகாம்புலியூர் வழியாக கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதியில் இருந்து கரூர் பஸ் ஸ்டாண்ட் வந்த பஸ்களும் நெரிசலில் சிக்கி கொண்டன. அதை சமாளிக்க முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறினர்.
எனவே, கரூர் நகர பகுதியில் உள்ள தானியங்கி சிக்னல்களை, 24 மணி நேரமும், செயல்படும் வகையில் யு.பி.எஸ்., வசதியை செய்து தர, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.