/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சென்டர் மீடியனால் 3 கி.மீ., சுற்றும் அவலம் சென்டர் மீடியனால் 3 கி.மீ., சுற்றும் அவலம்
சென்டர் மீடியனால் 3 கி.மீ., சுற்றும் அவலம்
சென்டர் மீடியனால் 3 கி.மீ., சுற்றும் அவலம்
சென்டர் மீடியனால் 3 கி.மீ., சுற்றும் அவலம்
ADDED : செப் 12, 2025 02:14 AM
அரவக்குறிச்சி, செப். 12
அரவக்குறிச்சியில் இருந்து கணக்குப்பிள்ளை புதுார் பிரிவுக்கு செல்பவர்கள், காமக்காப்பட்டிக்கு பிரிந்து செல்லும் சாலையில் சென்டர் மீடியன் உள்ளதால் நேரே செல்ல முடியாமல், 3 கி.மீ., சுற்றி செல்லும் நிலையில் உள்ளனர்.
இவ்வழியை, அரவக்குறிச்சியில் இருந்து தினசரி வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள் என, ஏராளமானோர் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், எதிர் திசையில் வாகனங்கள் வருவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. நான்கு முனை சாலை சந்திக்கும் இந்த இடத்தில், ஏற்கனவே இருந்ததுபோல் பாதை ஏற்படுத்தி தர வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.