/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டி சங்கரா வித்யாலயா பள்ளி சாதனை வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டி சங்கரா வித்யாலயா பள்ளி சாதனை
வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டி சங்கரா வித்யாலயா பள்ளி சாதனை
வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டி சங்கரா வித்யாலயா பள்ளி சாதனை
வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டி சங்கரா வித்யாலயா பள்ளி சாதனை
ADDED : செப் 24, 2025 01:37 AM
கரூர் :கரூர், வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான, 'வீட்டுக்கொரு விஞ்ஞானி' போட்டி நடந்தது. அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து, 120 அணிகள் பங்கேற்றன
. இதில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவர் சுர்ஜித், அஸ்வின் என்ற இரு மாணவர்கள், தங்கள் வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரன் உதவியோடு உருவாக்கிய மாணவர்களின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, 'நவீன புத்தகப்பை' என்ற அறிவியல் கண்டுபிடிப்பானது தலைச்சிறந்த, ஐந்து கண்டுபிடிப்புகளில் ஒன்றாக சீனியர் பிரிவில் தேர்வானது.
வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியரை பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் அசோக்சங்கர், செயலர் ஆனந்த் சங்கர், பள்ளி முதல்வர் காமேஷ்வர ராவ் ஆகியோர் பாராட்டினர்.