Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாநகராட்சி தீர்மானத்தில் 'அமைச்சர் செந்தில் பாலாஜி'

கரூர் மாநகராட்சி தீர்மானத்தில் 'அமைச்சர் செந்தில் பாலாஜி'

கரூர் மாநகராட்சி தீர்மானத்தில் 'அமைச்சர் செந்தில் பாலாஜி'

கரூர் மாநகராட்சி தீர்மானத்தில் 'அமைச்சர் செந்தில் பாலாஜி'

ADDED : ஜூலை 31, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
கரூர் : கரூர் மாநகராட்சி தீர்மானத்தில், 'அமைச்சர் செந்தில்பாலாஜி' என, பெயர் இடம் பெற்றிருப்பது சர்ச்-சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 14-ல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில்பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை நிதி அமைச்சர் பதவியை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை, வீட்டு வசதி அமைச்சர் முத்து-சாமிக்கும் மாற்றப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். கடந்த பிப்., 12ல் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் நிகழ்ச்சிகள், அழைப்பிதழ் உள்பட அனைத்து அரசு சார்ந்த நிகழ்வுகளில், செந்தில்பாலாஜி பெயர் பயன்படுத்தப்படவில்லை.இந்நிலையில், புகழூர் - வாங்கல் இணைப்பு சாலையில் தெரு விளக்கு கோரி வைக்கப்பட்டுள்ள, 22வது தீர்மானத்தில், 'மாண்புமிகு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்படி' என்ற வாசகம் இடம் பெற்-றுள்ளது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. கரூர் மாநகராட்சி கூட்டம், நாளை நடக்கிறது. அதில், 'அமைச்சர்' வாசகம் கட்டாயம் விவாதத்தை கிளம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளத்துக்கு செலவு ரூ.12 லட்சம்

கரூர் மாநகராட்சி தீர்மானம் எண் 15ல், 'கரூர் மாநகராட்சி மண்டலம் 1, 2, 3, 4 ஆகியவற்றில் உள்ள, 48 வார்டுகளில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஆய்வு கூட்டங்கள், நேரடி கள ஆய்வு, மாநகராட்சி அறிவிப்புகள் ஆகியவற்றை, பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்டாகிராம் ஆகிய சமூக வலைத-ளங்களில் பதிவிடவும், அதில் வரப்பெறும் குறைகளை கண்காணித்தல் போன்ற பணிகளை தனியார் நிறுவ-னங்கள் மூலம் நிர்வகிக்க, மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வீதம், ஓராண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் ஒப்பந்-தப்புள்ளி கோர அனுமதி வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், 'கரூர் மாநகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. 10 கோடி ரூபாய்க்கு மேல், ஒப்பந்ததாரருக்கு பாக்கி தராமல் உள்ளதால் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. மாதந்தோறும், 20 முதல், 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆட்களை பணி அமர்த்தினால் ஆண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் அதிகபட்ச செலவாகும். ட்விட் போட ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் செலவு என்பது, எதிர்க்கட்சி கவுன்சிலர்களை மட்டுமின்றி, ஆளும் கட்சி கவுன்சிலர்களையும் மிரள வைத்துள்ளது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us