Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/குடிநீரில் கலந்த கழிவுநீர்; மக்கள் சாலை மறியல்

குடிநீரில் கலந்த கழிவுநீர்; மக்கள் சாலை மறியல்

குடிநீரில் கலந்த கழிவுநீர்; மக்கள் சாலை மறியல்

குடிநீரில் கலந்த கழிவுநீர்; மக்கள் சாலை மறியல்

ADDED : ஜூலை 31, 2024 12:05 AM


Google News
கரூர்: கரூரில் குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர் மாநகராட்சி, 30 வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரில் நேற்று குடி-நீரில் சாக்கடை கழிவு நீர் வருவதாக கூறி, 25க்கும் மேற்பட்ட-வர்கள், நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த, கரூர் மாநகராட்சி அதிகாரி மாரிமுத்து மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்-டவர்களிடம் கழிவுநீர் கலக்காத குடிநீர், சப்ளை செய்ய நடவ-டிக்கை எடுப்பதாக, பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் மறி-யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், எம்.ஜி.ஆர்., நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us