/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாணவர்களுக்கும் மாத உதவி தொகை விரிவுப்படுத்தப்படும்: கலெக்டர் தகவல்மாணவர்களுக்கும் மாத உதவி தொகை விரிவுப்படுத்தப்படும்: கலெக்டர் தகவல்
மாணவர்களுக்கும் மாத உதவி தொகை விரிவுப்படுத்தப்படும்: கலெக்டர் தகவல்
மாணவர்களுக்கும் மாத உதவி தொகை விரிவுப்படுத்தப்படும்: கலெக்டர் தகவல்
மாணவர்களுக்கும் மாத உதவி தொகை விரிவுப்படுத்தப்படும்: கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 27, 2024 12:56 AM
கரூர்: '' அரசு பள்ளியில் மாணவர்களுக்கும், தமிழ் புதல்வன் என்ற பெயரில், மாத உதவி தொகை திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்-ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.தமிழக அரசின், விலையில்லாத சைக்கிள்கள் வழங்கும் விழா, மண்மங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
அதில், பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த, 119 மாணவ, மாணவி க-ளுக்கு, சைக்கிள்களை வழங்கி கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில், 67 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த, 6,397 மாணவ, மாணவிகளுக்கு, மூன்று கோடி யே, எட்டு லட்சத்து, 29 ஆயிரத்து, 680 ரூபாய் மதிப்பில் விலையில்லாத சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.தமிழக அரசின் சார்பில், காலை உணவு திட்டம் உள்ளிட்ட, பல்-வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின், பள்ளி கல்வித்துறைக்கு வழங்கி வருகிறார். புதுமை பெண் திட்டத்தில், மாணவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழ் புதல்வன் என்ற பெயரில் மாணவர்களுக்கும், விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, கல்வியில் உயர்ந்த இடத்தை, மாணவ, மாணவிகள் அடைய வேண்டும். இவ்வாறு பேசினார்.விழாவில், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, பள்ளி தலைமையாசிரியர் சக்திவேல் மற்றும் அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.