/உள்ளூர் செய்திகள்/கரூர்/கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 27, 2024 12:56 AM
குளித்தலை: குளித்தலை அருகே, கொசூர் ஊராட்சி ஒட்டப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 230க்கு மேற்பட்ட மாண-வர்கள் பயின்று வரும் நிலையில், எட்டு ஆசிரியர்கள் இருக்க-வேண்டிய நிலையில் தற்போது, இரு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதால், படிப்பின் தரம் குறைந்து வருவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளி முன் போராட்டத்தில் ஈடு-பட்டனர்.குளித்தலை அடுத்த, கொசூர்., பஞ்., ஒட்டப்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு, 230க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் குறைந்தது, 8 ஆசிரியர்கள் பணி-புரிய வேண்டும். இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.கிராம பகுதியில் பள்ளி இருப்பதாலும், பஸ் வசதி இல்லாத-தாலும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதற்கு தயக்கம் காட்டுகின்-றனர். ஆசிரியர் பற்றாக்குறையாக இருந்தாலும், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்-கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது நீடித்து வருகிறது.கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் சார்பில் பல முறை மனுக்கள் அளித்தும், எந்த விதமான நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த, 230 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி முன், பெற்றோர்களுடன் போராட்-டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்-டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர்கள் வந்தவுடன் மாண-வர்கள் பள்ளிக்குள் சென்றனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் கூறுகையில்,'' பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்கள் பணி மாறுதல் பெறும் போது, இந்த இடத்தை ஈடுகட்டமுடியும், தற்போது தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்-டுள்ளது,'' என்றார்.