/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாநில அளவிலான கேரம் போட்டி கரூர் அணிக்கு நாளை வீரர்கள் தேர்வு மாநில அளவிலான கேரம் போட்டி கரூர் அணிக்கு நாளை வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான கேரம் போட்டி கரூர் அணிக்கு நாளை வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான கேரம் போட்டி கரூர் அணிக்கு நாளை வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான கேரம் போட்டி கரூர் அணிக்கு நாளை வீரர்கள் தேர்வு
ADDED : ஜூன் 19, 2025 01:51 AM
கரூர், மாநில அளவிலான, கேரம் போட்டியில் பங்கேற்கும் வகையில், கரூர் மாவட்ட அணிக்கு, பரணி பார்க் பள்ளியில் நாளை (20ல்) வீரர்கள் தேர்வு நடக்கிறது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மன் மோகனரங்கன், தலைவர் ராம சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கேரம் சங்கம் சார்பில், 75 வது மாநில அளவிலான சீனியர் கேரம் சாம்பியன் ஷிப் போட்டிகள் வரும், 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. அதில், பங்கேற்கும் வகையில் கரூர் மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நாளை காலை, 9:00 மணிக்கு பரணி பார்க் பள்ளியில் நடக்கிறது. எனவே, கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் சீனியர் பிரிவில் விளையாட பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 98428-67905 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.