Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆணி அடித்து விளம்பர பலகை பட்டுபோகும் அபாயத்தில் மரங்கள்

ஆணி அடித்து விளம்பர பலகை பட்டுபோகும் அபாயத்தில் மரங்கள்

ஆணி அடித்து விளம்பர பலகை பட்டுபோகும் அபாயத்தில் மரங்கள்

ஆணி அடித்து விளம்பர பலகை பட்டுபோகும் அபாயத்தில் மரங்கள்

ADDED : செப் 12, 2025 02:13 AM


Google News
கரூர், கரூர் மாவட்ட, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான புங்கன், புளியமரம், அரச மரம், வேப்ப மரங்கள் உள்ளன. பல மரங்கள், 50 ஆண்டுகளை கடந்தவையாக உள்ளன. மரங்களில், பள்ளி, கல்லுாரி, ரியல் எஸ்டேட், கோச்சிங் சென்டர் விளம்பர பலகைகள் அதிக அளவில் ஆணி அடித்து வைக்கப்பட்-டுள்ளன.

ஆணி அடிப்பதால் நாளடைவில் மரங்கள் காய்ந்து பட்டுப்போக அதிகவாய்ப்பு உள்ளது. சிறிய மரங்கள் முதல் பல ஆண்டு கடந்த பழமையான மரங்களில், ஆணி அடித்து விளம்பர பலகை வைப்-பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கரூர் மாவட்-டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும், 4 சதவீதம் தான் மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. அதிலும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில், 2 சதவீத அளவில் மரங்கள் இருக்கின்றன. மீத-முள்ள, 2 சதவீத மரங்கள் தான் கரூர் மாவட்டம் முழுவதும் உள்-ளன. வனப்பரப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நட-வடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இருக்கும் மரங்களில், விளம்பர பதாகைகளை ஆணி அடித்து வைக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. மரங்-களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us