/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'குரூப் - 4' தேர்வுக்கு 10 நிமிடம் தாமதம் தேர்வெழுத அனுமதி கேட்ட தேர்வர்கள் 'குரூப் - 4' தேர்வுக்கு 10 நிமிடம் தாமதம் தேர்வெழுத அனுமதி கேட்ட தேர்வர்கள்
'குரூப் - 4' தேர்வுக்கு 10 நிமிடம் தாமதம் தேர்வெழுத அனுமதி கேட்ட தேர்வர்கள்
'குரூப் - 4' தேர்வுக்கு 10 நிமிடம் தாமதம் தேர்வெழுத அனுமதி கேட்ட தேர்வர்கள்
'குரூப் - 4' தேர்வுக்கு 10 நிமிடம் தாமதம் தேர்வெழுத அனுமதி கேட்ட தேர்வர்கள்
ADDED : ஜூன் 10, 2024 02:34 AM
ஓசூர்: சூளகிரியில், 10 நிமிடம் தாமதமாக வந்த, 'குரூப் - 4' தேர்வர்கள், தேர்வு மையம் முன் அமர்ந்து அனுமதி கேட்டும், அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம், 41,219 பேர் தேர்வெழுத விண்ணப்பித்த நிலையில், 9,736 பேர் தேர்வெழுத வரவில்லை. சூளகிரி தாலுகாவில் மொத்தம், 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்திமுகம் பகுதியில் இருந்த தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு, 100க்கும் மேற்பட்ட தேர்வர்களால் செல்ல முடியவில்லை. தேர்வு ஆரம்பித்தவுடன், கல்லுாரி கேட்டை, தேர்வு மைய அதிகாரிகள் மூடி விட்டனர். அதனால், 10 நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்களால், தேர்வு அறைக்கு செல்ல முடியவில்லை.
தேர்வெழுத அனுமதிக்காததால், ஆண்கள், பெண்கள் என, 100க்கும் மேற்பட்டோர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, கல்லுாரி கேட் முன் அமர்ந்து, தேர்வு எழுத அனுமதி கேட்டனர். ஆனால், அதிகாரிகள் தேர்வெழுத அனுமதிக்காததால், கண்ணீர் மல்க, தேர்வர்கள் வீடு திரும்பினர். இதேபோல், மாவட்டம் முழுவதும் பல தேர்வு மையங்களில் சற்று தாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப் படாததால், 'ஆப்சென்ட்' எண்ணிக்கை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.