ADDED : செப் 19, 2025 01:02 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தேவீரஹள்ளி முருகன் கோவில் வளாகத்தில், அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூடம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது.
எம்.பி., தம்பிதுரை, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். இதில், 200 பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது.