/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வேன் - பைக் மோதல் கட்டட மேஸ்திரி பலி வேன் - பைக் மோதல் கட்டட மேஸ்திரி பலி
வேன் - பைக் மோதல் கட்டட மேஸ்திரி பலி
வேன் - பைக் மோதல் கட்டட மேஸ்திரி பலி
வேன் - பைக் மோதல் கட்டட மேஸ்திரி பலி
ADDED : செப் 19, 2025 01:02 AM
கிருஷ்ணகிரி, பைக் மீது பிக்கப் வேன் மோதி, கட்டட மேஸ்திரி பலியானார்.கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளியை சேர்ந்தவர் சஞ்சீவி, 32. அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 29, கட்டட மேஸ்திரி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் யமஹா க்ரக்ஸ் பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை சஞ்சீவி ஓட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி அருகே, கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த பிக்கப் வேன் மோதியதில் பிரகாஷ் இறந்தார். படுகாயங்களுடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சஞ்சீவி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.