/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'குண்டுகட்டாக துாக்கி வந்து பள்ளியில் விடுவாங்க' மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி கலெக்டர் 'கலகல' 'குண்டுகட்டாக துாக்கி வந்து பள்ளியில் விடுவாங்க' மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி கலெக்டர் 'கலகல'
'குண்டுகட்டாக துாக்கி வந்து பள்ளியில் விடுவாங்க' மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி கலெக்டர் 'கலகல'
'குண்டுகட்டாக துாக்கி வந்து பள்ளியில் விடுவாங்க' மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி கலெக்டர் 'கலகல'
'குண்டுகட்டாக துாக்கி வந்து பள்ளியில் விடுவாங்க' மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி கலெக்டர் 'கலகல'
ADDED : ஜூன் 03, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி, 3
“அப்போதெல்லாம், பள்ளிகளுக்கு செல்ல அடம் பிடித்த எங்களை, குண்டுகட்டாக துாக்கி வந்து பள்ளியில் விடுவார்கள். ஆனால் நீங்கள் சிரித்தவாறு பள்ளிக்கு வருகிறீர்கள்,” என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசினார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று, தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,740 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், 2.03 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது. கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட கலெக்டர், தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் இன்று பள்ளிக்கு வந்துள்ளீர்கள். வந்த முதல் நாளே உங்களுக்கு, பாட புத்தகங்கள், பள்ளிப்பை மற்றும் சீருடை வழங்கப்படுகிறது. எங்கள் காலத்தில் நாங்கள் விடுமுறை முடிந்து, பள்ளிக்கு செல்ல அடம்பிடித்து அழுவோம். எங்கள் பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள், குண்டுக்கட்டாக எங்களை துாக்கி வந்து பள்ளியில் விட்டு செல்வர்.
இன்று நிலைமை மாறி உள்ளது. தற்போதைய மாணவர்கள் சிரித்தவாறு பள்ளிக்கு வருகிறீர்கள். பள்ளி ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகள் போல், பார்ப்பதாக தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகின்றனர். நீங்களும் அதேபோல் அரசு மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் படி, சிறந்த கல்வியை பயின்று, மாவட்ட கலெக்டராகி, என் போல் நீங்களும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பேச வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சர்தார், டி.இ.ஓ., சரவணன், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, பள்ளி தலைமை ஆசிரியை ஆண்ட்ரூமரிய ஜூலி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.