/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு 'கட்டிங்' சலுான் கடைக்காரரின் பரந்த மனப்பான்மை மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு 'கட்டிங்' சலுான் கடைக்காரரின் பரந்த மனப்பான்மை
மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு 'கட்டிங்' சலுான் கடைக்காரரின் பரந்த மனப்பான்மை
மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு 'கட்டிங்' சலுான் கடைக்காரரின் பரந்த மனப்பான்மை
மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு 'கட்டிங்' சலுான் கடைக்காரரின் பரந்த மனப்பான்மை
ADDED : ஜூன் 02, 2025 04:11 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி அருகே, தல்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 32; தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே, 10 ஆண்டுகளாக 'ஜி.எம்.,' சலுான் கடை நடத்தி வருகிறார். கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஒரு ரூபாய்க்கு மாணவர்களுக்கு, நேற்று முடி வெட்டப்படும் என அறிவித்திருந்தார். இதையறிந்த மாணவர்கள் படையெடுத்தனர்.
இதுகுறித்து மூர்த்தி கூறியதாவது: வழக்கமாக சிறுவர்களுக்கு முடி வெட்ட, 80 ரூபாய் கட்டணம் வாங்குகிறேன்.
பள்ளி திறக்கப்படும் நிலையில், ஏழை மாணவர்களுக்கு, ஒரு ரூபாய் மட்டும் பெற்று நேற்று முடி வெட்டினேன். மாலை வரை, 60க்கும் மேற்பட்டோர் முடி வெட்டிக்கொண்டனர்.
இந்தாண்டு தான் இம்முயற்சியை கையில் எடுத்தேன். இதில்லாமல் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக முடி வெட்டி வருகிறேன். இவ்வாறு கூறினார்.