ADDED : செப் 26, 2025 02:07 AM
ஓசூர் :ஓசூர் மாநகர, தி.மு.க., மேற்கு பகுதிக்கு உட்பட்ட பாகலுார் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாநகர பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், ஓசூர், தி.மு.க., மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சத்யா தலைமை வகித்தார்.
இதில், ஓசூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வடிவேல், பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகள், வாக்காளர்கள் விபரங்கள், உள்ளிட்டவற்றை விரைந்து கொடுக்க வலியுறுத்தினார்.