ADDED : செப் 26, 2025 02:12 AM
கிருஷ்ணகிரி அஞ்செட்டி அடுத்த அக்குள் கொள்ளையை சேர்ந்தவர் மாதப்பன், 35, கூலித்தொழிலாளி. இவருக்கு முனியம்மா என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். கடந்த, 18 மாலை சித்தப்பனுார் அருகே சென்ற மாதப்பனை, தொட்டமஞ்சு கொள்ளையை சேர்ந்த மாரப்பன், 31 என்பவர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தப்பினார்.
நேற்று அஞ்செட்டி அருகே சுற்றித்திரிந்த மாரப்பனை, அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மாதப்பனும், மாரப்பனும் கடந்த, 10 மாதங்களுக்கு முன், புதையல் எடுக்க சென்ற விவகாரத்தில் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாகவும், அந்த முன்விரோதத்தில் மாதப்பனை வெட்டி கொன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.