/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வீடு, மயானம் வசதி கேட்டு இ.கம்யூ., ஆர்ப்பாட்டம் வீடு, மயானம் வசதி கேட்டு இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
வீடு, மயானம் வசதி கேட்டு இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
வீடு, மயானம் வசதி கேட்டு இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
வீடு, மயானம் வசதி கேட்டு இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2025 01:37 AM
கிருஷ்ணகிரி, இ.கம்யூ., கட்சி (மா.லெனினிஸ்ட்) சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் வீடற்ற ஆதிதிராவிட மக்களுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
நிறுத்தப்பட்டுள்ள ஆதிதிராவிட மக்களுக்கான இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தரும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஆதிதிராவிட மக்களின் பயன்பாட்டிற்காக மயானம், மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.