/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண், கல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல் மண், கல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
மண், கல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
மண், கல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
மண், கல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
ADDED : செப் 26, 2025 01:38 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை உதவியாளர் வர்ஷா, 27, மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அட்டக்குறுகி அருகே கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 7 யூனிட் எம்.சாண்ட் கடத்தப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகார் படி சூளகிரி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல உத்தனப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., வெங்கடேசன் மற்றும் போலீசார் கோவிந்தாபுரம் கூட்ரோடு அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் நின்ற மினி டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் அளவிலான கற்கள் லட்சுமிபுரத்திலிருந்து உள்ளுறுக்கி வழியாக உத்தனபள்ளிக்கு கடத்த முயன்றது தெரிந்தது. மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.